Categories
தேசிய செய்திகள்

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா… இந்த ஆண்டு நடக்குமா?… முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம்…!!!

மைசூரு தசரா விழாவில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவுறுத்தியுள்ளார்.

உலகம் முழுவதும் புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகை ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு பத்து நாட்கள் தொடர்ந்து கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த விழாவில் மிகவும் புகழ்பெற்ற ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்படும். அதில் யானைகள் அணிவகுத்து சென்று, அலங்கார ஊர்திகள், கலைக்குழுவினர், போலீஸ் குழுவினர் மற்றும் குதிரைப் படைகள் அந்த ஊர்வலத்தில் கட்டாயம் இடம்பெறும். அந்தக் கோலாகல விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பார்கள். அவர்கள் அனைவரும் கலாச்சார நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்.

அந்தப் பத்து நாட்களும் மைசூர் நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படும். ஆனால் தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக மைசூரு தசரா விழாவை மிக எளிமையாக கொண்டாடுவதற்கு அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. வருகின்ற 17 ம் தேதி மைசூரு தசரா விழா தொடங்குகிறது. கொரோனா போராளிகளை கௌரவம் செய்யும் வகையில் அந்த விழாவை டாக்டர் மஞ்சுநாத் தொடங்கி வைக்க உள்ளார்.அதன்பிறகு மைசூரு அரண்மனையில் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை குழு அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

இந்த நிலையில் மைசூரு தசரா விழா ஏற்பாடுகள் பற்றி முதல்-மந்திரி எடியூரப்பா மந்திரி மற்றும் அதிகாரிகளுடன் நேற்று பெங்களூரில் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.அதில் மைசூரு தசரா விழா ஏற்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் கொரோனா பரவாமல் தடுக்க விதிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் முன்கூட்டியே கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.கொரோனா பாதிப்பு இல்லாத வர்களை மட்டுமே விழாவில் அனுமதிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |