Categories
தேசிய செய்திகள்

இங்கிலாந்து தூதர் பதவி… டெல்லி இளம் பெண்ணுக்கு கிடைத்த கௌரவம்… குவியும் பாராட்டுகள்…!!!

இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதரக தலைநகர் டெல்லியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்தார்.

இந்தியாவில் இருக்கின்ற இங்கிலாந்து தூதரகம் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் ‘ஒருநாள் தூதர்’ என்ற போட்டியே நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த போட்டி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 11-ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தன்று நடைபெறும். இந்தியாவில் இருக்கின்ற 18 வயது முதல் 23 வயது வரையிலான பெண்கள் மட்டுமே அந்த போட்டியில் பங்கேற்க முடியும். போட்டியில் வெற்றி பெறும் பெண் இந்தியாவுக்கான ஒரு நாள் இங்கிலாந்து தூதராக பதவி வகிப்பது வழக்கம்.இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் உலக அளவில் அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்களை எடுத்துரைத்தல் என்பவையாகும்.

அவ்வகையில் இந்த வருடத்திற்கான போட்டிக்காக,கொரோனா காலத்தில் பாலின சமத்துவத்திற்கான உலகளாவிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றி ஒரு நிமிட வீடியோவை சமர்ப்பிக்க வேண்டும் என இங்கிலாந்து தூதரகம் கூறியிருந்தது.அந்த மாபெரும் போட்டியில் தலைநகரான டெல்லியை சேர்ந்த 18 வயதுடைய கல்லூரி மாணவி சைதன்யா வெங்கடேஸ்வரன் வெற்றி கண்டு இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதராக தேர்வானார்.கடந்த புதன்கிழமை அன்று ஒருநாள் தூதராக பதவியேற்ற அவர், தூதரக துறை தலைவர்கள் அனைவருக்கும் அவரவர் பணிகளை ஒதுக்கி வைத்தார்.

அதன்பிறகு மூத்த பெண் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை, செய்தியாளர் சந்திப்புமற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்டெம்ப் உதவித்தொகை திட்டத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வது போன்ற பல்வேறு பணிகளை சைதன்யா வெங்கடேஸ்வரன் நன்றாக செய்து முடித்தார். இங்கிலாந்து தூதரகம் நடத்தும் இந்த போட்டியின் ஒருநாள் தூதராக பணியாற்றிய நான்காவது பெண் இவர்.

 

Categories

Tech |