முள்ளங்கி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மருத்துவ குணங்கள்:
சாம்பாருக்கு பயன்படும் கிழங்கு இனம் எனறு எல்லோருக்கும் தெரியும். காய்கறி கடைகளில் பெரும்பாலும் எல்லா பருவங்களிலும் கிடைக்க கூடியது.
இதில் வெள்ளை, சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில் மூன்று வகையிலும் விளைகின்றது. இருப்பினும், அதிகமாக விளைவதும், எளிதில் கிடைப்பது வெள்ளை நிற முள்ளங்கி.
சிறுநீர் பெருக்கும் கருவியாக செயல்படும். உடலை குளிர்ச்சிப்படுத்தும், வியர்வையை குறைத்து உடலின் நச்சு கிருமிகளை சிறுநீர் மூலம் வெளியேற வைக்கும்.
சிறுநீர் தடை, ஊதின உடம்பு குறையும். வயிற்றில் உள்ள எரிச்சல், குடைச்சல் நீங்கும். வாதம், வீக்கம், கப நோய்கள், இருமல் தீரும்.
நீர்த்தாரை எரிச்சல்கள் நீங்கும். சூதக கட்டு, சிறுநீர் கட்டு நோய்கள் தீரும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியினை தடை செய்யும்.
2 வாரம் தொடந்து முள்ளங்கி சாறு சாப்பிடுவதால் வயிற்றின் உப்பிசத்தை வெளியேற்றி நல்ல பலன் கிடைக்கும்.