Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – அனுமதி மறுப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதிகளில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தனுஷ்கோடி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று அதிகமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை தந்ததால் போலீஸ் சோதனை சாவடியில்  தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை அழகை ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் வந்து உள்ளனர்.

ஆனால் பதினைந்து கிலோமீட்டருக்கு முன்புள்ள நடராஜபுரம் பகுதியில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அந்த பகுதிக்கு அரசு பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் தனுஷ்கோடி, ஒத்ததாழை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் சிரமம் அடைந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Categories

Tech |