தாய்லாந்து நாட்டில் ரயில் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடூர விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் இருந்து கிழக்கே அம்பது கிலோ மீட்டர் தூரத்தில் சாச்சோயெங்சாவோ மாகாணத்தில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது அதன் எதிரே புத்தகத் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிலர் வந்து கொண்டிருந்த பேருந்து ரயில் மீது மோதியது. இந்தக் கோர விபத்து இன்று காலை 8 மணிக்கு நிகழ்ந்தது.அந்த சம்பவத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் இந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்து அதன் மேற்கூரை தூக்கி எறியப்பட்டது.அதுமட்டுமன்றி பலரின் உடல்கள் ரயில் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தன.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தாய்லாந்து நாட்டில் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவது வழக்கம். அங்கு அதிக விபத்துக்கள் ஏற்பட காரணம் மோசமான சாலைகள், விரைவு பயணம்,குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் ஒழுங்கற்ற சட்ட நடைமுறைகள் ஆகிய அனைத்தும் காரணமாக உள்ளன.