கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தலித் பெண் ஊராட்சி தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவத்தின் ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜ் போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் அருகே உள்ள தெற்கு திட்டை கிராமத்தில் பெண் ஊராட்சி தலைவராக பணியாற்றி வரும் திருமதி ராஜேஸ்வரி கடந்த ஜூலை மாதம் நடந்த ஊராட்சி கூட்டத்தில் தரையில் அமர வைக்கப்பட்டதாக புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜ், ஆறாவது வார்டு உறுப்பினர் சுகுமார், ஊராட்சி செயலாளர் சிந்துஜா ஆகிய 3 பேர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஊராட்சி செயலாளர் சிந்துஜாவையும், ஊராட்சியின் ஆறாவது வார்டு உறுப்பினர் சுகுமாரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து புவனகிரி போலீசார் இருவரையும் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். தலைமறைவாகியுள்ள ஊராட்சி துணை தலைவர் மோகன்ராஜை போலீசார் தேடி வருகின்றனர்.