கடுகு எண்ணெய் பயன்படுத்துவதனால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு
கடுகு எண்ணெய் பாக்டீரியாவை எதிர்த்து போராடும் இயல்பு கொண்டது. இது நமது உடலில் நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஒமேகா 5, ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் இ போன்ற சத்துக்கள் கடுகு எண்ணெயில் நிறைந்துள்ளது.
கடுகு எண்ணெயுடன் பூண்டு பல்லை சேர்த்து நன்றாக சூடாக்கி பாதம் மற்றும் மார்பில் தேய்ப்பதனால் சளி மற்றும் இருமலில் இருந்து விடுபடலாம்.
கடுகு எண்ணெய் உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதோடு ரத்த சிவப்பு அணுவை மேம்படுத்த உதவுகிறது.
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, இதய தசைகளுக்கு தேவையான ஆக்சிஜன் இல்லாதது, இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை கடுகு என்னை தடுக்கிறது.
கடுகு எண்ணெயை நன்றாக சூடாக்கி அதில் இருந்து வரும் ஆவியை முகர்ந்தால் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் சரியாகும்.
கடுகு எண்ணெய் வைத்து கால் மூட்டு மற்றும் தசைகளில் மசாஜ் செய்து வருவதால் வலிக்கு தீர்வு கிடைக்கும்.