Categories
லைப் ஸ்டைல்

ஆரஞ்சு விதையின் நன்மை தெரியுமா….? இனி வேண்டாம் சொல்ல மாட்டிங்க…!!

ஆரஞ்சு பழத்தின் விதைகளை சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு

ஆரஞ்சு பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. அதைப்போன்று ஆரஞ்சு பழத்தின் விதைகளிலும் பல நன்மைகள் உள்ளது. ஆரஞ்சு பழம் சாப்பிடும்போது விதைகளையும் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு பல சத்துக்கள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆன்டி ஆக்சிடென்டாக இருக்கும் ஆரஞ்சு பழத்தை விதையுடன் சாப்பிடுவதனால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது.

ஆரஞ்சு பழச்சாறு தயார் செய்யும் போதும் விதைகளை அகற்றாமல் சேர்த்து அரைப்பதனால் அதில் இருக்கும் முழு ஆரோக்கியமும் உடலுக்கு கிடைக்கும்

ஆரஞ்சு விதைகளைச் சாப்பிட்டால் உடல் சோம்பல் நீங்கும். அதோடு உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.

ஆரஞ்சு விதைகளை வைத்து தயார் செய்யப்படும் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்தினால் தலைமுடி வலிமை பெறுவதோடு வளர்ச்சியும் இருக்கும். அதுமட்டுமன்றி இது தலையில் ரத்த ஓட்டத்தை சீர் செய்யவும் உதவுகிறது.

Categories

Tech |