Categories
தேசிய செய்திகள்

‘ஊரடங்கால் வறுமை” 10 நாட்களே ஆன குழந்தை…. 100 ரூபாய்க்கு விற்ற தாய்…!!

ஊரடங்கில் ஏற்பட்ட வறுமையினால் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையை 100 ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலரும் வருமானமின்றி வறுமையில் வாடினர். அவ்வகையில் ஜார்க்கண்டை சேர்ந்த பெண் கடுமையான வறுமைக்கு தள்ளப்பட்டார். இதனால் தனது பத்து நாள் குழந்தையை வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து தனது குழந்தையை விற்க முடிவு செய்து தனக்கு தெரிந்த தம்பதியிடம் 100 ரூபாய் வாங்கிக் கொண்டு குழந்தையை கொடுத்துள்ளார்.

இது காவல்துறையினருக்கு தெரியவர குழந்தையை பெற்ற தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர் குழந்தையை யாரிடம் விட்டாரோ அவர்கள் பற்றிய தகவலை கூறினார். பிறகு குழந்தையை அவர்களிடம் இருந்து மீட்ட காவல்துறையினர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் சேர்த்ததோடு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |