இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகளுக்கு இடையிலான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான அணுகுமுறை குறித்து ராணுவ உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை அண்மைக்காலமாக தீவிரமடைந்து வருகிறது. இதை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு ராணுவ அளவிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தியா-சீனா இடையே இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து அப்போது ஆராயப்பட்டது.
வெளியுறவு துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவரும் இதில் கலந்து கொண்டார். சீனாவுடனான ஏழாவது கட்ட பேச்சுவார்த்தை வரும் 12ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் அது குறித்து அணுகுமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.