தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி,சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அது மட்டுமன்றி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மிக அதிக பலத்த காற்று வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.