Categories
அரசியல் சற்றுமுன்

யாரா இருந்தாலென்ன… எங்க கூட கூட்டணி வைக்கணும்னா இததான் பண்ணனும்…!!!

அதிமுக கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு எந்த கட்சியாக இருந்தாலும் எங்களால் அறிவிக்கப்பட்டவர்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற முடியும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி கூறியுள்ளார்.

வருகிற ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக முதல்வர் வேட்பாளராக திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலமாக நீண்ட நாட்களாக அதிமுகவில் நிலவி  வந்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை முடிவுக்கு வந்தது. அடுத்த கட்டமாக கூட்டணி கட்சிகள் யார் யார் என்ற சலசலப்பு அதிமுகவிலும், திமுகவிலும் தற்போது நிலவியுள்ளது.

இதுகுறித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய கட்சியாக இருந்தாலும் மாநில கட்சியாக இருந்தாலும் எங்களால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே கூட்டணியில் இடம்பெற முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிச்சயமாக எங்கள் கூட்டணியில் இடம் பெற முடியாது என கூறியுள்ளார்.இதையொட்டி அதிமுகவின் கூட்டணி கட்சிகள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |