Categories
தேசிய செய்திகள்

நடுவானில் பறந்த விமானம்… திடீரென பிரசவ வலி… துடிதுடித்த பெண்… விமானத்தில் பிறந்த குழந்தை…!!!

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பெங்களூருவைச் சார்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.அவர் தனது சொந்த வேலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றுள்ளார்.நேற்று முன்தினம் மாலை இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு அவர் புறப்பட்டுள்ளார். அவர் வந்து கொண்டிருந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் வலி தாங்க முடியாமல் துடித்தார். அந்தப்பெண்ணின் நிலைமையைப் பற்றி விமான பணிப்பெண்கள் அனுப்பிரியா, திருப்பி, அங்கீகா ஆகிய மூன்று பேரும் அந்த விமானத்தில் பயணம் செய்த மகப்பேறு மருத்துவர் சைலஜாவிடம் இதைப்பற்றி கூறியுள்ளனர்.

அதன்பிறகு அந்தப் பெண்ணுக்கு மருத்துவ சைலஜா பிரசவம் பார்க்க முடிவு செய்தார். இதனைத் தொடர்ந்து விமானப் பணிப்பெண்கள் விமானத்திற்குள் ஒரு தனி அறை போன்று அமைத்துக் கொடுத்தனர். அதன் பிறகு விமான பணிப்பெண்கள் உதவியுடன் டாக்டர் சைலஜா அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அவருக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதுமட்டுமன்றி பெங்களூரில் இருக்கின்ற விமான நிலைய அதிகாரிகளை, விமான பணிப்பெண்கள் தொடர்பு கொண்டு குழந்தை பிறந்த செய்தியைக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து விமானம் பெங்களூரில் தரை இறங்கிய பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த ஆம்புலன்ஸ் மூலமாக அந்தப் பெண்ணும் அவரின் குழந்தையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது அந்தப் பெண்ணும் குழந்தையும் நலமுடன் இருக்கிறார்கள்.பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த விமான பணிப் பெண்களுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |