மத்திய அமைச்சக செயலாளர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அலுவலகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி, காலை 10 முதல் 6.30 மணி வரை என இரு பிரிவாக அதிகாரிகள் பணியாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து அரசு நடவடிக்கைகளும் முற்றிலும் முடக்கப்பட்டன. மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் கணக்கில்கொண்டு மத்திய மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது அரசு ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.