அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில், ஊரடங்கு பெரும் பங்கு வகித்தது. ஆனால் தொடர்ந்து ஊரடங்கை அமலில் வைத்திருக்க முடியாத காரணத்தினால்,
படிப்படியாக பல தளர்வுகளை மத்திய அரசு சமீப மாதங்களாக அறிவித்து வருகிறது. அந்தவகையில், தற்போது நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் 100 பேருக்கும் அதிகமான ஆட்கள் பங்கேற்கும் அரசியல் கூட்டங்களை நடத்த மாநில அரசுகள் அனுமதி அளிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் அரங்குகளில் மொத்தம் உள்ள இருக்கைகளில் 50 சதவிகிதம் அளவிற்கு ஆட்களை வைத்து மட்டுமே நிகழ்ச்சி நடத்தவும் அனுமதி அளித்துள்ளது.