Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம்… பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் …!!!

ஊரடங்கு தளர்வுகள்  படிப்படியாக அமலுக்கு வந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நிலையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு தழுவிய ஊரடங்கினை அறிவித்தது மத்திய அரசு. சில மாதங்கள்  நீடித்த இந்த ஊரடங்கில் பொதுமக்கள் பெரும்பாலான பொருளாதார பிரச்சினைகளை சந்தித்தனர். எனவே  நாட்டின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டும் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை  மத்திய மற்றும் மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன.இந்நிலையில் கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்து வருவதன் காரணமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி இன்று காலை விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார.சமூக  இடைவெளியை கடைபிடிக்கவேண்டும்,பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்  என்ற அறிவுரைகளை அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்துகள்,ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் துண்டுப் பிரசாரங்களை வழங்கவும் , விழிப்புணர்வு சம்பந்தமான போஸ்டர்களை ஒட்டவும் மத்தியஅரசு  உத்தரவிட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்கள்  வாயிலாக விழிப்புணர்வு சம்பந்தமான அறிவுரைகளை மக்களுக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |