2021 ஆம் ஆண்டில் உலகில் பெரும்பாலானோர் வறுமையில் தவிக்கும் சூழ்நிலை ஏற்படும் என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஒருபுறம், இந்த வைரஸ் தொற்றால், லட்சக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். அதேசமயம், பொருளாதாரமும் இந்த காலகட்டத்தில் மோசமான அளவில் சரிந்து காணப்படுகிறது.
இந்நிலையில் கொரோனாவால் 2021 ஆம் ஆண்டில் 15 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவர் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. 82 சதவிகிதம் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில், மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்படுவர். ஏற்கனவே கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புக்கு சமமாகப் கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளும் இருக்கும் என கூறியுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரையில், இந்தியா நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கக்கூடிய மக்கள் அதிகம் இருக்கும் நாடு என்பதால், இதன் பாதிப்பு இந்தியாவில் எவ்வளவு இருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.