நம்மைப் பார்த்ததும் பிறருக்கு பிடிக்க வேண்டும் என்றால் தலை முதல் கால் கால் வரை மிகவும் அட்ராக்டிவ் தோற்றத்துடன், நாம் பிறருக்கு காட்சி அளிக்க வேண்டும். பெரும்பாலும் பிறரைக் கவர வேண்டும் என்பதற்காக, முகத்தில் தான் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவார்கள். ஆனால், பலருக்கு முகத்தை தாண்டி உடலின் கை, கால் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கவனம் செல்லும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
வெயிலில் அலைந்து வேலை பார்ப்பவர்களுக்கு முகத்தை விட கை மிகக் கருமையாக இருக்கும். இந்த கருமையைப் போக்க ஒரு கிண்ணத்தில் 2 தேக்கரண்டி காப்பி தூள், 2 தேக்கரண்டி சர்க்கரை, 3 தேக்கரண்டி தயிர் எடுத்து நன்றாகக் கலந்து கைகளில் தடவி 15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் கைகளை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, கைகளில் உள்ள கருமை நீங்கி பளிச்சென்று இருக்கும்.