Categories
கிரிக்கெட் விளையாட்டு

டேய்… ப்ளீஸ் டா…! ஒரு ரெண்டு ரன் அடிடா…! கேதார் ஜாதவ் மீது ரசிகர்கள் அதிருப்தி …!!

நேற்று சென்னை அணி – கொல்கத்தா அணி மோதிய ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது.

13 வது ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற 21 ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை அணி மோதியது. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து பிறகு வெற்றி கண்ட சென்னை அணி இந்தப் போட்டியில் வெற்றிபெறும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் துரதிஸ்டவசமாக சென்னை அணி தோல்வியை சந்தித்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 167 ரன் மட்டுமே எடுத்து. 168 ரன்களை எளிதாக வென்றுவிடலாம் என்ற நிலையில் தான் முதல் 10 ஓவர் ஆட்டம் இருந்தது.

பின்னர் கொல்கத்தா அணியின் அசத்தலான பந்து வீச்சால் சென்னை அணியால் இலக்கை சேஸ் முடியவில்லை. 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது. தொடர்ந்து சொதப்பி வந்த கேதார் ஜாதவ் இந்த போட்டியிலும் ஏமாற்றமே கொடுத்தார். இதனால் அவர் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். சென்னை அணி தோல்வி அடைந்ததிலிருந்து டுவிட்டரில் கேதார் ஜாதவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

https://twitter.com/pavan_0407/status/1313903297862922240

கேதார் ஜாதவ்வை சென்னை அணிக்கு எடுத்து என்ன பயன் ? அவரை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் ? வேறு நல்ல வீரரை தேர்வு செய்ய வேண்டும். அவரை இவ்வளவு பணம் கொடுத்து தேர்வு செய்தது எதற்காக ? தோனி எதற்காக தொடர்ந்து அவரை ஆட வைக்கின்றார் ? என்றெல்லாம் சென்னை அணி நிர்வாகத்தினரை நோக்கி ரசிகர்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வீடியோக்களை பரப்பி வருகின்றனர்.

https://twitter.com/AdityaParitosh3/status/1313927442063474688

https://twitter.com/Md_Mustafa_01/status/1313920973909839872

Categories

Tech |