Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த மாணவர்… ஆம்புலன்சில் எழுதிய தேர்வு… வியப்பை ஏற்படுத்திய நிகழ்வு…!!!

கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் ஆம்புலன்சில் அமர்ந்து தேர்வு எழுதிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தாலும், தேர்வுகள் அந்தந்த மையங்களில் தான் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் தேர்வுக்கு செல்ல முடியாத நிலைக்கு ஆளானதால், ஆம்புலன்ஸில் அமர்ந்து தேர்வு எழுதியுள்ளார். அந்த மாணவர் கேரளாவிலுள்ள கோட்டயம் மாவட்டத்தில் இருக்கின்ற அர்ப்போகரா என்ற பகுதியில் வசித்து வருகிறார்.

அவர் திருநாக்கராபகுதியில் இருக்கின்ற கல்லூரியில் டிப்ளமோ படித்துக் கொண்டிருக்கிறார். அவரின் படிப்பிற்கான இறுதி தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், தேர்வுக்கு தயாராகி வந்த அவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.அதன்பிறகு கொரோனா மையத்தில் சேர்க்கப்பட்ட அந்த மாணவர் தேர்வு மையத்திற்கு சென்று தேர்வு எழுத முடியாத சூழ்நிலை உருவாகியது. இருந்தாலும் அந்த மாணவர் தேர்வு எழுத விருப்பம் கொண்டதால், அவரை ஆம்புலன்ஸில் வைத்து தேர்வு எழுத வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ஆம்புலன்சில் அந்த மாணவர் தேர்வு நடந்த மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

அதன்பிறகு தேர்வு எழுதுவதற்கான வினாத்தாளை மாணவருடன் வந்திருந்த சுகாதாரத்துறையினரிடம் தேர்வு கண்காணிப்பாளர் வழங்கினார். அதனைப் பெற்ற மாணவர் ஆம்புலன்சில் அமர்ந்து தேர்வு நேரம் ஆன 11 மணி முதல் ஒரு மணி வரை தேர்வு எழுதி முடித்தார். அதன் பிறகு மாணவர் எழுதிய விடைத்தாள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேர்வு கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது.தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்த மாணவர் மீண்டும் அங்கிருந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

Categories

Tech |