வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெறும் என மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.