Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பாடா…! ஒரு வழியா OK ஆகிட்டு… ஆட்சிக்கு EPS…. கட்சிக்கு OPS…. உற்சாகத்தில் அதிமுகவினர் …!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே தொடர்வார் என தெரிகின்றது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் ஆறு மாதங்களில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஆளும் அதிமுகவிற்கு பரபரப்புடன் அரசியல் களம் நகர்ந்து வருவது தொண்டர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற ரேஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து கொண்டு இருக்கின்றது.

இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வதுக்கும் போட்டி இருந்தது. இதை சமாதானம் செய்ய அமைச்சர்கள் மாறி மாறி இருவர் வீட்டிற்கும் சென்ற வண்ணம் இருந்தனர். அதிமுகவின் உயர்நிலை குழு கூட்டம், செயற்குழு கூட்டம் நடத்தியும் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று இன்று அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை தொடங்கிய ஆலோசனை இரவு பத்து முப்பது மணி  வரை நீடித்தது. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்வார் என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் அதிக அதிகாரங்கள் வழங்குவது, கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட குழுவை அமைப்பது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவழியாக தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்த அதிமுக முதல்வர் வேட்பாளர்கள் போட்டி இன்று முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

Categories

Tech |