கிசான் திட்டம் முறைகேட்டை தொடர்ந்து அந்த திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஆயிரம் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்த தமிழக அரசு நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக வேளாண் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆத்மா என்னும் இந்த திட்டத்தை செயல்படுத்த வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் உதவி மேலாளர்கள் என தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் பிரதமரின் கிசான் திட்டத்தின் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு நிதி வழங்கப்பட்டு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆத்மா திட்டத்தில் பணியாற்றும் 30-க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தும் ஆயிரம் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்தும் அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தமிழ்நாடு அரசு வேளாண் தொழில்நுட்ப வேளாண்மை முதன்மை அதிகாரிகளின் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன் ஆத்மா திட்ட ஊழியர்களை பணியிடமாற்றம் செய்து அரசு நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடையை விதித்தார். மேலும் வழக்கு தொடர்பான வேளாண் துறையின் முதன்மை செயலாளர் வேளாண்மை துறை இயக்குனர் ஆகியோர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.