அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காவல் துறையினர் போலி வழக்குகள் பதிவு செய்வதாக குற்றம் சாட்டிய மாட்டுவண்டி உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக 4 மாட்டு வண்டிகளும், உதயனத்தம் கிராமத்தில் ஒரு மாட்டு வண்டியையும், காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் மணல் அல்ல பணம் பெற்றுக் கொண்டு போலி வழக்குகளை பதிவு செய்து மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்வதாக மாட்டுவண்டி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிகாரிகளின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டித்து மாட்டு வண்டி உரிமையாளர்கள் ஜெயங்கொண்டம் கும்பகோணம் செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் லாரி டயருக்கு கீழ் படுத்துக்கொண்டு மறியலில் ஈடுப ட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.