கொரோனா வைரஸ் தொற்று காற்றில் பரவ அதிகம் வாய்ப்புள்ளதாக அமெரிக்க நோய் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று காற்றின் மூலம் பரவலாம் என்று அமெரிக்க நோய் தடுப்பு மையம் கூறியுள்ளது. மேலும் காற்றில் இருக்கின்ற வைரஸ் கிருமிகள் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று பொதுநல மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை குறித்து அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் இதற்கு முன்னதாக இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. தற்போது மீண்டும் இப்படி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெளியாகியுள்ள தகவலில், சமூக இடைவெளியை கடைபிடித்த நபர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதுபோன்ற காரணங்களால் கொரோனா வைரஸ் தொற்று காற்றில் பரவுவதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் அமெரிக்க நோய் தடுப்பு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.