இலங்கை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 290_ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.
இலங்கையில் தலைநகர் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் , அதே போல கொழும்பு புறநகரில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடிபு மற்றும் உருகொடவட்டாவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, அங்கே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி வெடித்தது என நேற்று ஒரே மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடித்தது.
இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. நேற்று காலை முத்தாலே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. மொத்த இலங்கையும் இந்த கொடூர தூயரத்தால் கண்ணீரில் மிதக்கின்றது. தற்போது வெளியான தகவலின் படி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290_ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. நேற்று வெளியான தகவலின் படி பலி எண்ணிக்கை 215 என தெரிவிக்கப்படட நிலையில் தற்போது அதிகரித்துள்ளதால் இலங்கை சோகத்தில் மூழ்கியுள்ளது. இதில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கையும் 5_ஆக அதிகரித்துள்ளது.