சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநகராட்சி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக சென்னை மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது. இதனால் சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 10 இலிருந்து 36 ஆக அதிகரித்துள்ளது. இது ஒரே நாளில் மூன்றரை மடங்கு அதிகம் என்றும், இதனால் மீண்டும் சென்னையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.