Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“MLA காதல் திருமணம்” கடத்தல்…? கொலை மிரட்டல்…? விளக்கமளித்த MLA…!!

கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ இளம்பெண்ணை கடத்தி வந்து திருமணம் செய்ததாக பரவிய செய்திக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக எம்எல்ஏ-வான பிரபு இன்று அதிகாலை தனது காதலியை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பெண்ணின் தந்தையான சுவாமிநாதன் தனது மகள் கடத்தப்பட்டு திருமணம் செய்யப்பட்டிருப்பதாக எம்எல்ஏ பிரபு மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதொடர்பாக காணொளி ஒன்றை சுவாமிநாதன் வெளியிட்டார். அதில் பிரபு தனது வீட்டிற்கு அடிக்கடி வந்ததாகவும் தன்னுடன் நட்புடன் பழகி வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமன்றி பெண்ணின் திருமணத்தால் மனமுடைந்து சுவாமிநாதன் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபு தனது மனைவி சௌந்தர்யாவுடன் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், இன்று சௌந்தர்யாவுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. நான் சௌந்தர்யாவை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவளை கடத்தியதாகவும் பல்வேறு வதந்திகள் பரவியது.

ஆனால் அது போன்று எதுவும் நடக்கவில்லை கடந்த சில மாதங்களாக சௌந்தர்யாவும் நானும் காதலித்து வந்தோம். நேரடியாக அவளது பெற்றோரிடம் சென்று பெண் கேட்டபோது மறுப்பு தெரிவித்தனர். அதன்பிறகு எனது பெற்றோர்கள் சம்மதிக்க சௌந்தர்யாவை திருமணம் செய்து கொண்டேன். இதுதான் நடந்ததே தவிர சௌந்தர்யாவின் குடும்பத்தினருக்கு எந்தவிதமான கொலை மிரட்டல் விடுக்கவில்லை என கூறியுள்ளார்.

Categories

Tech |