பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளையும், கலாச்சாரத்தையும் சொல்லிக்கொடுத்த வளர்த்தால் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தடுக்கப்படும் என பாஜக எம்எல்ஏ கூறிய கருத்துக்கு திரு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
உத்திரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு கலாச்சாரத்தையும், நல்ல பண்புகளையும் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்றும் அவ்வாறு வளர்த்தால் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்படும் என்றும் உத்தர பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ திரு சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இதற்கு திரு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திரு ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அருவருப்பான ஆர்.எஸ்.எஸ் ஆணாதிக்க மனநிலை இது என்றும், பாலியல் வன்கொடுமை ஆண்கள் செய்வதாகவும் ஆனால் பெண்களுக்கு நல்ல பண்புகள் கற்பிக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.