கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண்மணி தவறான சிகிச்சையால் உயிர் இழந்ததாக உயிரிழந்தவரின் மகன் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்து உள்ள மருதம்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரிகா என்ற பெண்மணி கொரோனா தொற்று காரணமாக நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவர் குணமடைந்து விட்டதாக. அவர் குணமடைந்து விட்டதாக நேற்று முன்தினம் மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அன்று மாலை செவிலியர் ஊசி ஒன்றை போட்டு உள்ளார்.
சற்று நேரத்திலேயே சந்திரிகா அவரது மகனின் கண் முன்னே உயிரிழந்துள்ளார். தவறான ஊசி தோட்டத்திலேயே தனது தாய் உயிரிழந்ததாக அவரது மகன் அனிஷ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடமும், காவல் நிலையத்திலும் புகார் செய்துள்ளார்.