Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல்…. ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநரை சந்திக்க இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் எடுத்து வரக் கூடிய கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், அது எந்த கட்டத்தில் இருக்கிறது. மக்களைக் காப்பதற்கு தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும் அறிக்கை கொடுத்து விளக்கம் அளித்து வருகின்றார்.

அதேபோல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 5 மணி அளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்து அறிக்கை கொடுக்கின்றார். சென்னையில் நோய் தொற்று கடந்த சில நாட்களாக குறைந்த நிலயில் தற்போது மேலும் அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆளுநரிடம் தெரிவிப்பார் என்று தெரிகின்றது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு ? மத்திய அரசிடம் உள்ள நிலுவைத் தொகையை  கேட்டு பெற வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த சந்திப்பு  இருக்க வாய்ப்புள்ளது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர், டிஜிபி திரிபாதி, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர்.

அதிமுகவில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் உடனான சந்திப்பில் அதிமுக விவகாரம் பேசப்படுமா ? என்று அரசியல் விமர்சகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக ஆளுனருடனான முதல்வரின் சந்திப்பு தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |