Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

“தாய்ப்பால் கொடுத்தல்” குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் நல்லது….!!

பூமியில் வசிக்கும் மானுடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை என்றாலும் அதற்கு பதிலாக அவர்களுக்கு வாய்த்திருப்பது பால் என்கின்றன வேதங்கள்.

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால் அதற்கு மாற்று பசும்பால் தான் கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையானது.

ஒரு குழந்தை, தேவையான அளவு தாய் பால் குடிக்கின்றதா என்பதனை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஒன்று அதன் எடை, இரண்டு அதன் வளர்ச்சி. பிறந்த சில நாட்களில் குழந்தை கொஞ்சம் எடையினை இழக்கும். 14 நாட்களுக்குள் குறைந்த எடையினை மீண்டும் பெற்று விடும்.

குழந்தைக்கு பால் கொடுக்கும் போது தாய்க்கு சவுகர்யமாகவும், வலியின்றியும் இருக்கும்.

நாள் ஒன்றுக்கு பிறந்த குழந்தை 6-8 முறை  பால் குடிக்கும்.

குழந்தை பால் அருந்தியபின் மார்பகம் காலியாகவும், மென்மையாகவும் இருக்கும்.

குழந்தை பால் குடிப்பதனையும், விழுங்குவதனையும் அவர்களால் கேட்க முடியும். வயிறு நிரம்பியதும் குழந்தை அதன் முகத்தினை திருப்பிக் கொள்ளும். தாய் பால் பல வகை சத்துகள் கொண்டது. தாய் பால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு  உதவும் .

8-9 மாதம்  குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் , குறைவான எடையில் பிறந்த  குழந்தைகளுக்கும் தாய்ப்பாலை விட சிறந்தது வேறு ஒன்றும் இல்லை.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு தாய்பால் கொடுப்பதால் தாயின் கருப்பை எளிதாய் சுருங்குகின்றது. இதனால் அதிக ரத்த போக்கு, ரத்த  சோகை ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது.

தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய  அதிகமான எடை எளிதாய் குறைந்து விடும்.

தாய் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சுகாதாரக் குறைவு ஏற்படும் வாய்ப்பு முற்றிலும் குறைவு.

Categories

Tech |