Categories
உலக செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 8 பேர் கைது…. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி…!!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 207_ஆக அதிகரித்துள்ளது. 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இலங்கையில் தொடர் பதற்றம் நிலவியதையடுத்து  இலங்கையின் கொழும்பு நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் , பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் , பதற்றத்தை தணிக்க சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைத் தொடர்புத்துறை ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில் , இந்த சம்பவம்  ஒரு துரதிருஷ்டமான சம்பவம், மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த சூழ்நிலையில்  இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு அமைதியாக இருக்க வேண்டும். மேலும் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது என்று தெரிவித்தார்.

Categories

Tech |