Categories
உலக செய்திகள்

“இலங்கை தாக்குதல்” 10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை…!!

இலங்கை தேவாலய தாக்குதல் பற்றி 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் , குடியிருப்புகள் என 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 207 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 450க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதல் குறித்து  கடந்த 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து இலங்கை நாட்டின் காவல்துறை தலைவர் புஜுத் ஜெயசுந்தரா _வுக்கு கடந்த 11_ஆம் தேதி இலங்கை  தேவாலயங்களை  குறிவைத்து தாக்குதல் போவதாக உளவுத்துறை எச்சரிக்கையை அவர் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அதில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு முக்கியமான தேவாலயம், கொழும்புவில் இருக்கும் இந்திய தூதரகம் உள்ளிட்ட  இடங்களை தற்கொலை தாக்குதல் நடத்த இருப்பதாக வெளிநாட்டு உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு எந்தஒரு இயக்கமும் இன்னும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த கொடூர குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Categories

Tech |