கேரளாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில் நேற்று மேலும் 7 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டும் என முதலமைச்சர் திரு பினராய் விஜயன் தெரிவித்திருந்தார். அதன்படி புதிய உச்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 9 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் 7,834 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 21 ஆயிரத்து 334 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் இதுவரை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 620 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், தற்போது 80 ஆயிரத்து 818 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரளாவில் நேற்று முதல் முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.