சென்னையில் போதை மாத்திரைகளை விற்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை முகப்பேர் நீச்சல்குளம் அருகில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் நிற்பதாகவும், அவர் போதை மாத்திரைகள் வைத்துள்ளதாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை கையும் காலுமாக பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த நபரிடம் நாக்கில் தடவக்கூடிய போதைப்பொருள் மற்றும் 23 போதை மாத்திரை உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்கள் இருந்தன. அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து அந்த வாலிபரையும் கைது செய்தனர். அதன் பின் மேற்கொண்ட விசாரணையில் அவர் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. தற்பொழுது அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.