Categories
உலக செய்திகள்

ட்ரம்ப்க்கு தொற்று உறுதி….. “அவர் இறந்து விடுவார்” சர்ச்சையை எழுப்பிய பதிவு…!!

 டிரம்ப்க்கு கொரோனா உறுதியான நிலையில் ஒபாமாவின் முன்னாள் பணியாளர் ட்விட்டரில் சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்தை பதிவிட்டார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தி தொடர்பாளராக பணிபுரிந்தவர் சாரா ரஹீம். இவர் அதிபர் டிரம்ப் தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதியானதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு அவர் அதனை உடனடியாக நீக்கி இருந்தாலும் அவரது பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ட்விட் செய்வது எனது நேர்மையான அடையாளத்திற்கு எதிரானது தான். ஆனால் அவர் இறந்து விடுவார் என்று உறுதியாக நம்புகின்றேன் என பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் அதிபருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து வெளியிட்ட பதிவு என்பதால் ட்ரம்ப் இறந்துவிடுவார் என அவர் தெரிவித்துள்ளார் என்று சமூக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. மறைமுகமாக ரஹீம் வெளியிட்ட பதிவை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Categories

Tech |