இமாச்சல பிரதேசத்தில் சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் மணாலியில் இருந்து லே செல்லும் நெடுஞ்சாலை பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10 அடி உயரத்தில் சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சுரங்கப்பாதை 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.உலகிலேயே நெடுஞ்சாலையில் மிக நீளமாக அமைக்கப்பட்டுள்ள சுரங்க இதுவேயாகும். 10 ஆண்டுகள் கடின உழைப்பால் இந்த சுரங்கம் கட்டப்பட்டுள்ளது. அதனால் மணாலியில் இருந்து லே செல்லும் தூரம் 46 கிலோமீட்டர் குறைவது மட்டுமல்லாமல் நான்கு மணி நேர பயணம் சேமிக்கப்படுகிறது. இந்த சுரங்கப் பாதைக்கு அடல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதில் ஒவ்வொரு 60 மீட்டர் இடைவெளிக்கும் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒவ்வொரு 250 மீட்டர் தூரத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.அதுமட்டுமன்றி 500 மீட்டர் தூரத்தில் அவசரகால வெளியேறும் வழி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று திறந்துவைத்துள்ளார்.