Categories
உலக செய்திகள்

டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்தது அமெரிக்க நீதிமன்றம்…!!

எச்1பி விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவுக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு எச்1பி விசா வழங்கி வருகிறது. இந்த எச்1பி விசா வழக்கமாக மூன்று ஆண்டுகள் வதையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு  தேவைப்பட்டால் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும். இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும் தான் பெற்று வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா காரணமாக லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் எச்1பி, எச்2பி, எல் மற்றும் ஜெ விசாக்கள் வழங்குவதில் இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்தி வைக்க டிரம்ப்  உத்தரவு பிறப்பித்தார்.

அமெரிக்காவின் மிக பெரிய தொழில் நிறுவனங்கள் டிரம்ப்பின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் எச்1பி விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் ட்ரம்பின் உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

Categories

Tech |