தமிழகத்தில் மத்திய அரசு நடத்திக்கொண்டிருக்கும் புதிர் போட்டியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருவதாக திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.
திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் மத்திய அரசு நிறுவனம் ஒரு புதிர் போட்டியை நடத்திக் கொண்டிருக்கிறது. அதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியாமல் தாய்மொழி மட்டுமே தெரிந்த குழந்தைகள் அதிக அளவில் இருப்பதால், இப்போட்டி அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்பட வேண்டும்”என்று அவர் பதிவிட்டுள்ளார்.