தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் என்ற ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றியும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புதுசத்திரம் ஊராட்சியில் தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்தியதாக கூறி கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், பஞ்சாயத்து தலைவர் கந்த பாபு ஆகியோர் மீது 143 மற்றும் 188 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.