வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் உடம்பில் ஏற்படக்கூடிய கருமை தன்மையை போக்க அருமையான ஃபேஸ் பேக் உள்ளது. அவை என்னவென்று இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
பச்சை பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
வேப்ப இலை – 3
வெட்டிவேர் – 3
கஸ்தூரி மஞ்சள் – 1/2 டேபிள்ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 1 டேபிள்ஸ்பூன்
லைம் ஜூஸ் – 1 டேபிள்ஸ்பூன்
துளசி விதை -3
ஆரஞ்சு பவுடர் -டேபிள்ஸ்பூன்
ஃபேஸ் தயாரிக்கும் முறை:
முதலில் மிக்ஸி ஜாரை எடுத்து அதில் கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை பயறு ஒரு டேபிள்ஸ்பூன், அரிசி மாவு ஒரு டேபிள்ஸ்பூன், 3 வேப்பிளை, 3 வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள் 1/2 டேபிள்ஸ்பூன், ரோஸ் வாட்டர் ஒரு டேபிள்ஸ்பூன், 3 துளசி விதை, ஆரஞ்சு பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அந்த கலவையுடன் தயிர், பால் அல்லது பட்டர் ஏதேனும் ஒன்றை சேர்த்து கலந்து விடவும்.
இதனை உடம்பில் கருமை உள்ள இடத்தில் இருபது நிமிடங்கள் தடவி ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இப்படி வாரம் 2முறை செய்து வருவதினால் உடம்பில் உள்ள கருமை நிறம் நீங்கி பொலிவுடனும் புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.