Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமாகி 1 வாரம் கூட ஆகல….. காதலியை பிரித்து கூட்டு போய்ட்டாங்க…. காதலன் விஷமருந்தி தற்கொலை முயற்சி…. உறவினர்கள் மறியல்…!!

கிருஷ்ணகிரி  அருகே திருமணமான ஒரு வாரத்திற்குள் காதல் மனைவி பிரித்து  சென்றதால், காதலன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரும் மணி நகரை சேர்ந்த சௌமியா என்ற பெண்ணும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 25 ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பவே, மணமகன் தேவராஜ், தனது உறவினர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு அளிக்கும்படி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து, இருவீட்டாரும் அழைத்துவரப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், பெண் வீட்டார் உரிய முறைப்படி, வரவேற்பு நிகழ்ச்சிகளை உறவினர்களை அழைத்து நடத்தி விட்டு பிறகு பெண்ணை கணவருடன் அனுப்பி வைக்கிறோம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு பெண்ணை அவரது உறவினர்கள் கூட்டிச் சென்றனர். அதே போல்,

கணவன், மனைவி இருவரையும் சேர்த்து வைக்க காவல்துறை முயற்சி எடுக்க வேண்டும் என தேவராஜின்  உறவினர்களும் காவல்நிலையத்தில் புகார் அளித்து சென்றனர். இதையடுத்து திருமணமான ஒரு வாரம் கூட தாண்டாத நிலையில், காதல் மனைவியைப் பிரித்து அழைத்துச்சென்ற தூக்கத்தில், காதலன்  விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

பின் இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின் மருத்துவமனை முன்பு கூடிய தேவராஜன் உறவினர்கள், காதலர்களை சேர்த்து வைக்க கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு தேவராஜன் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |