சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் எய்ம்ஸ் மருத்துவமனை புதிய தகவலை வெளியிட்டுள்ளது
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதையடுத்து பல்வேறு பிரச்சனைகள் எழ தொடங்கியது. தற்போது அவரது தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. சிபிஐ தொடர்ந்து சுஷாந்த் வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் ரியா உடனான விசாரணையின் போது போதை கும்பல் பற்றிய தகவல் வெளிவந்தது.
இதனைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ரியா உட்பட 8 பேரை கைது செய்தனர். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் சுஷாந்த் சிங் மரணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் மும்பை மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சுஷாந்த் சிங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சில குறைகளை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் சுஷாந்த் சிங்கின் மரணத்தில் விஷம் கொடுத்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையை இறுதியானது என்று அவர்கள் கூறியது சிபிஐ விசாரணையிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிபிஐ மும்பை காவல்துறையினர் கூறியபடி தற்கொலைக்கு சுஷாந்த் தூண்டப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.