Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எனக்கு கலெக்டர் ஆகணும்….. இருக்கையில் அமர வைத்து….. அரசு பள்ளி மாணவனை கௌரவித்த உதவி கலெக்டர்…..!!

கலெக்டராக ஆசைப்பட்ட கூலி தொழிலாளியின் மகனை தன் அரியணையில் அமர வைத்து அழகு பார்த்த குடியாத்தம் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

வேலூர் மாவட்டம்  குடியாத்தம் பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளியின் மகன் நரசிம்மன் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற தேசிய திறன் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது குறித்து அறிந்த குடியாத்தம் உதவி கலெக்டர்ஷேக் மன்சூர் நேரடியாக மாணவரை சந்திக்க விரும்பி அவரது அலுவலகத்திற்கு அழைத்து,

அவரிடம் நீ படித்து என்ன ஆக விரும்புகிறாய் ? என்று கேள்வியை கேட்க, தான் கலெக்டராக விரும்புவதாக மாணவன் கூறியுள்ளான். இதையடுத்து, அவனை தனது இருக்கையில் அமரவைத்து உதவி கலெக்டர் கௌரவித்தார். இச்சம்பவம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவ, இது போன்ற நல்ல அதிகாரிகள், அரசுப் பள்ளி மாணவர்களை உரிய முறையில் ஊக்கப்படுத்தினால் அவர்களும் வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனையை மேற்கொள்வார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Categories

Tech |