Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிராமங்களுக்குள் நுழைந்த 23 காட்டு யானைகள் “பீதியில் பொதுமக்கள் !!…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைந்து சுற்றி வருவது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

ஓசூருக்கு அடுத்துள்ள உள்ள போடூர் ,அத்திமுகம் போன்ற பகுதிகளில் 16 காட்டு யானைகளும், ஓசூர் பகுதியில்  7 காட்டு யானைகளும் கிராமங்களுக்குள் நுழைந்து ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக  வலம் வந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிகமாக காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால்  பொதுமக்கள் அச்சம் அடைந்து விரைவில் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வனத்துறையினரிடம் மனு அளித்துள்ளனர்.

இதனிடையே யானைகளை காண்பதற்காக சிலர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர் .இந்த ஆர்வம் ஆபத்தில் முடிய கூடும் .ஆகவே யானைகளை பின்தொடர்வதை முற்றிலும்  தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |