முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுபற்றி கூறுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் ஆட்சி நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.கொரோனா தடுப்பு பணி மிக சிறப்பாக தமிழகத்தில் இருக்கின்றது.
பிரதமரே பாராட்டக்கூடிய வகையில் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி அமைந்துள்ளது.அறைக்குள் பேசுவதை வெளியில் பேசுவது ஒரு நாகரிகமற்ற செயல் என்பதுதான் எனது கருத்து”என்று அவர் கூறியுள்ளார்.