Categories
உலக செய்திகள்

அதிகம் தேடப்பட்ட கேள்வி….. வெளியான பதில்….. நம்ம ஊருக்காரர் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…!?

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை குறித்த சுவாரசியமான தகவலை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். 

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானி தான். அதேபோல் உலக அளவில் நம்பர் ஒன் பணக்கார் அமேசான் நிறுவனர் பெஸோஸ். இவர்கள் இருவரும் நம்பர் ஒன் இடத்தில் இருந்தாலும், உலகம் நம்பர் 1 இடத்தில் இல்லாத ஒரு சில பிரபலங்களை பற்றியே அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறது. அந்த வகையில், உலக அளவில் அதிகம் தெரிந்துகொள்ள விரும்பக்கூடிய நபராக உலகின் மிகப்பெரிய நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனம் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை இருக்கிறார்.

தற்போது இவரது சொத்து மதிப்பு குறித்த தேடல் என்பது மக்கள் மத்தியில் அதிகமாக காணப்பட்டுள்ளது. அதன்படி, ஹீரன் ரிச் லிஸ்ட் நிறுவனம் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு  குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.. அதில், அவரது சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும், 79 சதவிகிதம் வளர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இவரது சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூபாய் 5,900 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |