தமிழகத்தில் 22 வயது இளம்பெண் ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பணிக்காக திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வந்துள்ளார். பணி செய்ய வந்தவரை அவருடன் பணிபுரிந்து வரும் வேலையாட்கள் 6 பேர் கொண்ட கும்பல் தூக்கிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வடமாநில பெண்தானே, பிரச்சினை வராது என அசால்ட்டாக இருந்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், இளம்பெண் பலாத்காரம் தொடர்பாக தைரியமாக 6 பேர் மீதும் புகார் அளிக்க, அவர்களை காவல்துறையினர் கைது செய்ததோடு, மீதமுள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். உபியை தொடர்ந்து தமிழகத்திலும், இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.