ஊரடங்கில் பலருக்கும் உதவி வந்த நடிகர் சோனு சூட்க்கு ஐநா விருது வழங்கி கவுரவித்துள்ளது
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் தான் செய்து வந்த மனிதநேய செயலுக்காக ஐநாவிடம் இருந்து சிறப்பு விருதை பெற்றுள்ளார். ஊரடங்கில் துன்பப்பட்டு வந்த பல மக்களுக்கு சோனு சூட் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.
அதில் குறிப்பாக ரஷ்யாவில் சிக்கியிருந்த தமிழர்களை தாய்நாட்டிற்கு திரும்ப அழைத்துச் சென்றது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது, விவசாயிக்கு டிராக்டர் வழங்கியது என இவர் செய்த மனிதாபிமான செயல்களை அடுக்கிக் கொண்டே போக முடியும். இந்நிலையில் சோனு சூட்டின் சேவையைப் பாராட்டி ஐநா மனித நேய செயலுக்கான சிறப்பு விருதை அவருக்கு வழங்கியுள்ளது.